"அ" என்ற முதலெழுத்தைக் கொண்டு
"ழ" என்னும் அழகெழுத்தை பெற்ற
அழகின் திருவே!
தத்தை மொழியானவளே!
உலகை வளம் வந்தவளே!!
தமிழென்னும் பேருடையாள்!
வாழ்க நீ செறிவுடனே!!
ததியரால் பாடப்பெற்ற
பைந்தமிழே வாழ்க நீ!
பாரினிலே செழித்து நீ!!
அழகு வடிவானவளே!
அருஞ்சுவையை மிகுத்தவளே!!
அவ்வையார் பாடியதோர் ஆத்திச்சூடி!
இனிமையிலே பொங்குதடி இன்பம் கோடி!!
வந்ததொரு பல்லவிதான் எம்மை நாடி!
பழகு தமிழ் வார்த்தைகள்தான் எத்தனை கோடி!!
தமிழென்னும் நங்கையே!
பொங்குமொரு கங்கையே!!
பாமரனும் பாடுகின்ற
பைந்தமிழே வாழ்க நீ!
பாரினிலே செழித்து நீ!!
1 comment:
உலகின் முதல் மொழிக்கு ஒரு அழகு நடையால் வாழ்த்துபா / மேலும் தமிழ் வளர உங்கள் கவி புலமை வளரட்டும்
Post a Comment