Wednesday, January 17, 2018

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!

 கரும்பு இஞ்சி மஞ்சள் முளைத்த இரு சக்கர வாகனங்கள்!
கட்டியம் கூறுகிறது பொங்கல் வந்ததென்று!!
அழகு வரிசைக் கட்டிக் கொண்ட பானைகளும் களையங்களும்!
அறிவிப்பாய் கூறுகிறது பொங்கல் வந்ததென்று!!

பனை ஓலையா மாவிலையா பூங்கொத்துகளா!
பலவித தோரணங்கள் பறை சாற்றுகின்றன பொங்கல் வந்ததென்று!!
காய்கறிகளும் கனிக் கூட்டங்களும் கமுகும் வாழையும் கூட்டாய் நின்றன பொங்கல் வந்ததென்று!!
உழவுக் காளைகளும் காராம் பசுக்களும்!
ஆவலோடு பார்த்தன பொங்கல் வந்ததென்று!!

தீபமேற்றி சூரிய வழிபாடு!
உழவர்களின் முறைபாடு!
இத்தனை இன்பங்கள் அள்ளிக் கொடுத்திடும்!
பொங்கல் வந்ததென்று தான... தந்தானா... நீ பாடு!!

 பண முடக்கம் மழை பொய்த்து வழக்குகள் வந்தாலும்!
இன்னும் பற்பல இடர்கள் வந்தாலும்...
 புதுப்படங்கள் புத்தாடை புன்னகை பூசிவிட!!
பொங்கலும் வந்ததே எங்கள் துயர் மறக்க என்று!
தமிழர்கள் பாடினார்கள்..... (பொங்கலோ பொங்கல்!)

 - இராஜகுமாரி விஸ்வேஸ்வரன் 

No comments: